TNPSC Thervupettagam

சட்ட ஆணையத்தின் 287வது அறிக்கை

April 4 , 2024 106 days 174 0
  • வெளிநாடு வாழ் இந்தியர்கள்/வெளிநாட்டில் உள்ள இந்திய குடிமக்கள் மற்றும் இந்திய குடிமக்கள் ஆகியோருக்கு இடையேயான திருமணத்தைக் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று இந்தியச் சட்ட ஆணையமானது அதன் 287வது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.
  • நிலுவையிலுள்ள 2019 ஆம் ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணப் பதிவு மசோதாவினை (NRI மசோதா) திருத்தியமைப்பதன் மூலம் இந்த மாற்றங்களை மேற் கொள்ள இந்த அறிக்கை முன்மொழிகிறது.
  • வெளிநாடு வாழ் இந்தியர்களுடனான திருமணங்களைப் பதிவு செய்வதற்கான புதிய நடைமுறையையும் இந்த அறிக்கையானது பரிந்துரைக்கிறது.
  • மாவட்ட திருமண அதிகாரிகளுக்கு அறிவிப்பு வழங்குவதும், திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்பும் நபர்களுக்கு அதற்கான வாய்ப்பினை வழங்குவதற்காக இந்தத் திருமணம் குறித்த தகவல்களை 30 நாட்களுக்குக் காட்சிப்படுத்த வேண்டுமென்ற சில நடைமுறைகளும் இதில் அடங்கும்.
  • 2019 ஆம் ஆண்டு வெளிநாடுவாழ் இந்தியர்கள் மசோதாவின் விரிவாக்கத்துடன், ஒரு நபரின் கடவுச்சீட்டில் அவர்களின் திருமண நிலையைப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக, 1967 ஆம் ஆண்டு கடவுச் சீட்டு சட்டத்திலும் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென சட்ட ஆணையமானது பரிந்துரைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்