முன்னாள் தமிழகச் சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்றக் கீழவை (சட்டசபை) உறுப்பினர்களுக்கு மாதம் 25,000 ரூபாயாக வழங்கப்படும் ஓய்வூதியம் ஆனது ஜூன் மாதம் முதல் 30,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் ஆனது, மறைந்த முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு தொடங்குவதைக் குறிக்கிறது.
இந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டிற்கு 50,000 ரூபாயாக வழங்கப்படுகின்ற மருத்துவ உதவித் தொகையானது 75,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
அவர்களுக்கு மாதத்திற்கு 12,500 ரூபாயாக வழங்கப்படுகின்ற குடும்ப ஓய்வூதியமானது 15,000 ரூபாயாக உயர்த்தப்படும்.