முதன் முதலில் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம், அம்மாநிலத்தில் உள்ள விலங்குகளுக்கு சட்டப்பூர்வ நபர்கள் அல்லது நிறுவனம் என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது.
உரிமைகள், கடமைகள் மற்றும் வாழும் மனிதனின் பொறுப்புகள் ஆகியவற்றுடன் கூடிய தனித்துவமான ஆளுமையை விலங்குகள் பெற்றிருக்கும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதியரசர் ராஜுவ் சர்மா மற்றும் லோக்பால் சிங் ஆகியோர் தலைமையிலான அமர்வு விலங்குகள் இராஜ்ஜியத்தின் மீது தனித்துவமான அந்தஸ்தை வழங்கியுள்ளது.
பறவைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் உள்பட அனைத்து விலங்கு இராஜ்ஜியங்களும் உரிமைகள், கடமைகள் மற்றும் வாழும் மனிதனின் பொறுப்புகள் ஆகியவற்றுடன் கூடிய தனித்துவமான ஆளுமை கொண்ட சட்டப்பூர்வ நிறுவனமென உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.