TNPSC Thervupettagam

சட்டபூர்வ நிறுவன அடையாளங்காட்டி (LEI)

May 10 , 2023 564 days 289 0
  • மாற்ற முடியாதப் பத்திரங்கள், பத்திரப்படுத்தப்பட்ட கடன் கருவிகள் மற்றும் பட்டியலிடப் பட்ட பாதுகாப்பு ரசீதுகள் போன்றவற்றைப் பட்டியலிடத் திட்டமிட்டுள்ள வழங்குநர்களுக்கு வழங்கிட இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) சட்ட நிறுவன அடையாளங்காட்டி (LEI) எனும் அமைப்பை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • LEI என்பது நிதிப் பரிவர்த்தனைகளில் பங்கேற்கும் சட்ட நிறுவனங்களுக்கான ஒரு தனித்துவமான உலகளாவிய அடையாளங்காட்டியாகும்.
  • எந்தவொரு அதிகார வரம்பிலும் உள்ள  நிதிப் பரிவர்த்தனைக்கு ஆதரவாக  இருக்கும் ஒவ்வொரு சட்ட நிறுவனத்தையும் தனித்துவமாக அடையாளம் காணும் உலகளாவிய குறிப்புத் தரவு அமைப்பை உருவாக்குவதற்காக  இது வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இது ஒரு தனித்துவமான 20 எழுத்துக்கள் கொண்ட ஒரு குறியீடாகும் என்பதோடு, நிதிப் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் பல்வேறு சட்டப்பூர்வ நிறுவனங்களை அடையாளம் காண உதவும்.
  • தற்போது ரிசர்வ் வங்கி (RBI) 25 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள தனிநபர் அல்லாத கடன் வாங்குபவர்களுக்கு இக்குறியீட்டைப் பெறுவதைக்  கட்டாயப்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்