இந்திய ரிசர்வ் வங்கியானது ரூ.50 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட அனைத்து நிதிப் பரிமாற்றங்களுக்கும் வேண்டி சட்டப்பூர்வ நிறுவன அடையாளங் காட்டிகளை (Entity Identifiers) கட்டாயமாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் நிதியியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பங்காளர்களையும் தனித்துவ முறையில் அடையாளம் காண்பதற்கு இந்த 20 இலக்க எண் பயன்படுத்தப்பட உள்ளது.
இது மிகப்பெரிய அளவிலான பணப் பரிமாற்றங்களை மிகவும் நெருங்கிய முறையில் கண்காணிக்க வங்கிகள் மற்றும் ஒழுங்குமுறை நிறுவனங்களுக்கு உதவ உள்ளது.