2023-24 ஆம் ஆண்டிற்கானச் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் அமலாக்கத்திற்காகத் தமிழக அரசு 702 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
2023-24 ஆம் ஆண்டிற்கானச் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் அமலாக்கத்திற்காக சமீபத்தில் 351 கோடி ரூபாய் (மொத்த நிதியில் 50%) வழங்கப் பட்டது.
ஊரக மேம்பாட்டுத் துறையானது, இந்தத் திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கான சில விரிவான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.
ஒவ்வொருச் சட்டமன்ற உறுப்பினருக்கும் அவரவர் சட்டமன்றத் தொகுதியில் தொகுதி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.