TNPSC Thervupettagam

சட்டமன்ற மேலவை – மேற்கு வங்காளம்

July 9 , 2021 1144 days 582 0
  • மேற்கு வங்க சட்டமன்ற கீழவையானது சட்டமன்ற மேலவையை அமைப்பதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
  • அரசியலமைப்பின் 169வது சட்டப் பிரிவின் கீழ் ஒரு சட்டத்தின் மூலம்  ஒரு மாநிலத்தில் இரண்டாம் சட்டமன்ற அவையினை உருவாக்குவதற்கும் (அ) நீக்குவதற்கும் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.
  • இதற்காக அம்மாநிலத்தின் சட்டமன்ற கீழவையானது ஒரு தீர்மானத்தை சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும்.
  • இந்திய அரசியலமைப்பின் 171வது சட்டப் பிரிவின் படி ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையானது அந்த மாநிலத்தின் சட்டமன்ற கீழவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையின் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் இருக்கக் கூடாது.
  • மேலும் அந்த மாநிலத்தின் சட்டமன்ற மேலவையினுடைய உறுப்பினர்களின்  எண்ணிக்கையானது 40க்கு குறைவாகவும் இருக்கக் கூடாது.

 

 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்