TNPSC Thervupettagam

சட்டமன்றத்தில் புதிய விதிகள் – ஹரியானா அரசு

April 9 , 2021 1235 days 569 0
  • மாநிலச் சட்டமன்றத்தின் ஒழுங்குமுறையை (decorum) கடைபிடிப்பதற்காக வேண்டி ஹரியானா மாநில அரசு பல்வேறு புதிய விதிமுறைகளை இணைத்துள்ளது.
  • இந்த புதிய விதிமுறைகளின்படி, அவை, ஒவ்வொரு முறை கூடும்போதும் குறைந்த பட்சம் இரு அமைச்சர்கள் அதில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.
  • அங்கு ஏற்படும் அமளியின் போது, அவை உறுப்பினர்கள் ஆவணங்களைக் கிழிக்கக் கூடாது.
  • அவைக் கூட்டத்தின் போது உறுப்பினர்களால் கேட்கப் படும் கேள்விகள் 150 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என இந்தப் புதிய விதி கூறுகிறது.
  • இது அவையில் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான பதிலை வழங்கவும் சரியான தெளிவை அமைச்சர்கள் பெறவும் உதவும்.
  • மற்றுமொரு புதிய விதிமுறையின்படி, துணைக் கேள்விகள் கீழ்க்காணும் ஏதேனும் சிக்கல்களைக் கொண்டிருந்தால் அக்கேள்வி முறையற்றது என சபாநாயகர் கூறலாம். அவையாவன,
    • ஒருவேளை அக்கேள்வி பிரதானக் கேள்வியிலிருந்து எழுப்பப் படவில்லையெனில்,
    • ஒருவேளை அது தகவல்களைக் கோருவதற்கு பதில் தகவல்களை வழங்கினால்,
    • ஒருவேளை அக்கேள்வி ஒரு கருத்தின் ஒப்புதலையே அல்லது நிராகரிப்பையோ வேண்டினால்,
    • ஒருவேளை அக்கேள்வியானது கேள்விகள் தொடர்பான ஏதேனும் ஒரு விதிகளை மீறினால்.
  • மற்றுமொரு புதிய விதி விதான் சபாவின் (சட்டமன்றத்தின்) சபாநாயகரால் அமைக்கப்பட்ட குழுக்களானது பரிந்துரை செய்தால் அதன்மேல் சரியான காலத்தில் நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்