TNPSC Thervupettagam

சட்டவிரோத முறையிலான சொத்துத் தகர்ப்பு குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

November 18 , 2024 7 days 77 0
  • குடிமக்களின் சொத்துக்களை (கட்டிடங்களை) தகர்ப்பதற்கு உரிய நடைமுறைகள் பின்பற்றப் படுவதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது.
  • உச்ச நீதிமன்றம் ஆனது, வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அவர்களது சொத்து மற்றும் இன்ன பிற விவகாரங்களைக் கையாளுவதற்குப் போதுமான அவகாசம் அளிக்கிறது.
  • இந்த வழிகாட்டுதல்கள் என்பது, “சாலைகள், தெருக்கள், நடைபாதைகள், இரயில் பாதைகள் அல்லது நதிகள் அல்லது நீர்நிலைகள் போன்ற எந்தவொருப் பொது இடத்திலும் அமைக்கப் பட்டுள்ள அங்கீகரிக்கப்படாதப் பல கட்டமைப்புகள் மற்றும் நீதிமன்றத்தினால் தகர்ப்பிற்கான உத்தரவு வழங்கப்பட்ட பகுதிகள் ஆகியவற்றிற்குப் பொருந்தாது”.
  • ஒரு உரிமையாளர் அந்த கட்டமைப்பு குறித்து பதிலளிப்பதற்காக, அந்தக் கட்டமைப்பு இடிக்கப்படுவதற்கு முன்பே மிக குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்னதாக அவருக்கு அறிவிப்பு அறிக்கை அனுப்பப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • இந்த 15 நாட்கள் கெடுவானது, உரிமையாளர் அல்லது ஆக்கிரமிப்பாளர் அறிவிப்பு அறிக்கையினைப் பெற்ற தேதியிலிருந்து தொடங்கும்.
  • இந்த அறிவிப்பு அறிக்கையில், கட்டமைப்பின் விவரங்கள், அது ஏன் இடிக்கப்படுகிறது, மற்றும் உரிமையாளர்கள் இடிக்கப்படுவதை எதிர்த்து வாதிட அனுமதிக்கச் செய்யும் "தனிப்பட்ட விசாரணை" தேதி ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும்.
  • இந்த வழிகாட்டுதல்களை மீறுவது, இழப்பீடு நிர்ணயிப்புடன் கூடிய பல அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு வழி வகுக்கும் என்று நீதிமன்றம் கூறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்