TNPSC Thervupettagam

சட்டவிரோத, வெளிவராத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தலுக்கு எதிரான ஒரு போராட்டத்திற்கான சர்வதேச தினம் 2023 - ஜூன் 05

June 8 , 2023 539 days 220 0
  • இந்த வருடாந்திர நிகழ்வானது கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புக்கு எதிரான சட்ட விரோதமான, வெளிவராத  மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடித்தலால் ஏற்படும் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • 1995 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஒரு மாநாட்டைக் கூட்டி அத்துடன் நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கச் செய்வதற்கான நடத்தை நெறிமுறைகள் அதில் ஏற்றுக் கொள்ளப் பட்டன.
  • 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை இந்த நாளுக்கான தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
  • அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கடல் உணவுகளில் கிட்டத்தட்ட 32% சட்ட விரோதமாகப் பிடிக்கப் படுகிறது.
  • வடகிழக்கு அட்லாண்டிக் மற்றும் அதை ஒட்டியக் கடல் பகுதிகளில் உள்ள மீன்கள் 39% அளவில் மிதமிஞ்சி பிடிக்கப் படுவதாகக் கருதப் படுகிறது.
  • கடந்த 40 ஆண்டுகளில் கடல்வாழ் இனங்கள் 39% குறைந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்