இது சணல் விவசாயிகளின் வருவாயினை இரட்டிப்பாக்க ஜவுளித்துறை அமைச்சகம் மேற்கொள்ளும் ஒரு புதிய முயற்சி.
இந்த திட்டத்தின் பெயர் விரிவாக்கம் - Improved Cultivation and Advanced Retting Exercise for Jute (Jute – ICARE) - மேம்படுத்தப்பட்ட சணல் சாகுபடிமற்றும் மிருதுவாக்கும் முறைகள் என்பதாகும். இந்தத் திட்டம் விவசாயிகளிடையே சிறந்த வேளாண் நடைமுறைகள் மற்றும் நுண்ணுயிர்-உதவியுடன் சணலை மிருதுவாக்கும் முறைகளை அறிமுகம் செய்கிறது .
ரெட்டிங் என்பது சணலினை மிருதுவாக்கும் ஒரு செயல்முறை . ரெட்டிங் முறையில் சணல் நார்கள் திரவத்தில் வைக்கப்படும் , இது மரத்தின் திசுக்களில் இருந்து நார்கள் தளர்ந்து பிரிந்து வர உதவும்.
முதல் கட்டமாக அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்காள பகுதிகளில் ரெட்டிங் முறை பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டது .
இந்த திட்டத்தின் கீழ் , பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் கைப்பேசிகளுக்கு, சணல் சாகுபடியில் மேம்படுத்தப்பட்ட நடைமுறைகள் குறித்து குறுந்தகவல்கள் அனுப்பப்படும்.
சோனா (SONA)
இது மத்திய சணல் மற்றும் நெய்யப்பட்ட இழைகள் ஆராய்ச்சி நிறுவனம் (Central Research Institute for Research in Jute and Allied Fibres, CRIJAF) உருவாக்கிய நுண்ணுயிர் கூட்டமைப்பு ஆகும்.
நுண்ணுயிர் கூட்டமைப்பு (Microbial Consortium) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நுண்ணுயிரி குழுக்களின் இணைவாழ்வு நிலை ஆகும்.இதன் நோக்கம் சணல் விளைச்சலை அதிகப்படுத்துவதும் , சணலின் தரத்தினை உயர்த்துவதும் ஆகும்.