யூனியன் பிரதேசமான சண்டிகர், யூனியன் பிரதேசத்தின் பல்வேறு அரசு மற்றும் வர்த்தக இடங்களில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளின் கட்டண செலுத்துதலுக்கான பொலிவுறு நகர அட்டைகளை (Smart City Cards) வெளியிட்டுள்ளது.
பேங்க் ஆஃப் இந்தியாவுடன் கூட்டிணைவை ஏற்படுத்தி இத்திட்டத்தை சண்டிகர் தொடங்கியுள்ளது.
இதை செல்லத்தகு அடையாள அட்டையாகவும் பயன்படுத்த இயலும்
சண்டிகர் நகரத்தில் ஆதார் அட்டை உடைய அனைத்து பயனாளிகளும் யூனியன் பிரதேசத்தின் e-சம்பார்க் மையம் மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளில் பொலிவுறு நகர அட்டையை பெறலாம்.