July 20 , 2024
126 days
274
- குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் 6 குழந்தைகள் சண்டிபுரா வைரஸால் உயிர் இழந்திருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.
- சண்டிபுரா வெசிகுலோவைரஸ் (CHPV) எனப்படும் சண்டிபுரா வைரஸ், ராப்டோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஆர்என்ஏ வைரஸ் ஆகும்.
- இது முதன்முதலில் 1965 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் உள்ள சண்டிபுரா என்ற கிராமத்தில் கண்டறியப் பட்டது.
- இந்த வைரஸ் முதன்மையாக குழந்தைகளைப் பாதிக்கிறது மற்றும் இந்தியாவில் கடுமையான மூளையழற்சிப் பாதிப்புகளுடன் தொடர்புடையதாகும்.
- இந்த வைரஸ் முதன்மையாக பாதிக்கப்பட்ட மணல் ஈக்கள் (பிளெபோடோமஸ் வகை) கடிப்பதன் மூலம் பரவுகிறது.
- சண்டிபுரா வைரஸ் தொற்றுக்கு என்று குறிப்பிட்ட வைரஸ் தடுப்பு சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை.
Post Views:
274