சோழப் பேரரசர் முதலாம் இராஜராஜ சோழனின் பிறந்தநாள் ஆனது ஒவ்வோர் ஆண்டும் சதய விழாவின் போது தஞ்சாவூரில் கொண்டாடப்படுகிறது.
சதய விழாவானது தமிழ் மாதமான ஐப்பசியில் (அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதி முதல் நவம்பர் மாதத்தின் நடுப்பகுதி வரை) நடைபெறுகிறது.
கி.பி. 947 ஆம் ஆண்டில் அருள்மொழி வர்மன் எனும் பெயரில் பிறந்த அவர் வரலாற்றின் மிகச் சிறந்த மற்றும் தொலைநோக்கு ஆட்சியாளர்களில் ஒருவராக இவர் மிகவும் புகழ் பெற்றார்.
இராஜராஜ சோழனின் ஆட்சியானது, கி.பி. 985 முதல் 1014 ஆம் ஆண்டு வரை, இராணுவ வலிமை மற்றும் உள்ளார்ந்த நிர்வாகக் கொள்கைகளால் குறிக்கப்பட்டது.
இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகின்ற ஸ்ரீபிரகதீஸ்வரர் கோயில் (பெரிய கோயில்) ஆனது, கி.பி. 1003 மற்றும் 1010 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இராஜராஜ சோழனால் கட்டமைக்கப்பட்டது.