TNPSC Thervupettagam

சதுப்பு நில முதலைகளின் எண்ணிக்கை

April 16 , 2025 4 days 49 0
  • தமிழ்நாடு மாநில வனத்துறையானது, காடுகளில் உள்ள சதுப்பு நில முதலைகளின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கும் மனித-முதலை மோதலைக் குறைப்பதற்குமான ஆய்வுகளை நடத்தி வருகிறது.
  • தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் மக்கர் அல்லது சதுப்பு நில முதலைகள் (குரோக்கோடைலஸ் பளுஸ்டிரிஸ்) உள்ளன என்பதோடு இவை இந்தியாவில், மிகவும் குறிப்பாக கொள்ளிடம் நதிக்கரையில் பரவலாகக் காணப்படும் முதலை இனங்கள் ஆகும்.
  • தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அணைக்கரையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அதன் இனப்பெருக்க மையங்களில் பல குறிப்பிடத் தக்க மக்கர் முதலைகள் காணப்படுகின்றன.
  • திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் மையத்தில் 299 முதலைகளும், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் 93 முதலைகளும், திருப்பூர் மாவட்டம் அமராவதியில் 82 முதலைகளும் உள்ளன.
  • அணைக்கரையில் முதலை வளங்காப்பு மையத்தை நிறுவ தமிழக அரசு 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்