ராஜஸ்தான் மாநில வனத்துறையானது கியோலாடியோ தேசியப் பூங்காவிற்குள் ஒரு மிருகக்காட்சிச் சாலையை அமைக்க முன்மொழிந்துள்ளது.
இந்த மிருகக்காட்சிச் சாலையின் நோக்கம் சதுப்பு நிலங்களின் அகலிட அழிவுறா காத்தல் அமைப்பு (WESCE) ஆகும்.
இந்த மிருகக்காட்சிச் சாலையில் ஓங்கில்கள், முதலைகள், நீர் எருமைகள் மற்றும் பிற அயல்நாட்டு இனங்கள் காட்சிப்படுத்தப்படும்.
இந்த மிருகக்காட்சிச் சாலையில் காட்சிப்படுத்தப்படும் சதுப்பு நில இனங்கள் அதன் முக்கிய ஈர்ப்பாக விளங்கும்.
நீர்நாய்கள், மீன்பிடிப் பூனைகள், புல்வாய் இனங்கள், வராகமான்கள் போன்ற உள் நாட்டில் அழிந்து வரும் உயிரினங்களுக்கான இனப்பெருக்கம் மற்றும் மறு அறிமுக மையம் அமைக்கப் படுவதும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.