TNPSC Thervupettagam

சதுப்புநில இடர் குறியீடு 2025

April 12 , 2025 7 days 65 0
  • சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சதுப்பு நிலங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் சுற்றுச் சூழல் அமைப்புக்கான இடர் குறியீட்டை உருவாக்கியுள்ளனர்.
  • உலகில் சுமார் 56 சதவீதத்திற்கும் அதிகமான சதுப்புநிலங்கள் ஆனது மிக மோசமான சூழ்நிலையில் அதிக அல்லது கடுமையான ஆபத்தில் இருக்கலாம்.
  • மிகவும் மதிப்பு மிக்க சதுப்புநிலங்களில் சுமார் 34 சதவீதம் ஆனது, மிக கடுமையான மற்றும் மீள முடியாத சேதத்தைச் சந்திக்க நேரிடும்.
  • இது "செயல்பாட்டு மாற்றம்" என்றும் அழைக்கப்படுகிறது, அதாவது ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு முற்றிலும் மாறக்கூடும் மற்றும் மீள முடியாமல் போகக் கூடிய நிலையாகும்.
  • பிலிப்பைன்ஸ் நாடானது மிகவும் ஆபத்தில் உள்ள நாடுகளில் ஒன்றாகும்.
  • இது சுமார் 260,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான சதுப்பு நிலங்களைக் கொண்டு உள்ளதோடு மேலும் இது ஏற்கனவே பல புயல்களால் பாதிக்கப்பட்டு வருகிறது.
  • சதுப்புநிலங்கள் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 65 பில்லியன் டாலர் மதிப்பிலான வெள்ளப் பாதுகாப்பை வழங்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்