ஒடிசாவின் கேந்திரப் பாரா மற்றும் ஜகத்சிங்பூர் மாவட்டங்களில் முதன்முதலாக சதுப்பு நில வாழ் பிட்டா பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கணக்கெடுப்பின் போது 179 பறவைகள் காணப்பட்டன.
பித்ரகனிகா தேசியப் பூங்காவின் வழியே பாயும் மஹிபுரா ஆற்றின் முகத்துவாரத்திற்கு அருகில் உள்ள சதுப்புநிலங்களில் இந்தப் பறவைகள் அதிக எண்ணிக்கையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சதுப்புநில பிட்டா பறவைகள் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் காணப்படுகின்ற அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடிய நிலையில் உள்ள இனமாகும்.
இந்தப் பகுதிகளில் ஒடிசாவின் பித்ரகனிகா மற்றும் மேற்கு வங்காளத்தின் சுந்தரவனக் காடுகளும் அடங்கும்.