TNPSC Thervupettagam

சதுப்புநிலங்களின் மீது சந்திரனின் தாக்கம்

October 4 , 2022 656 days 349 0
  • சந்திரனின் சுற்றுப்பாதையின் அலைவு அல்லது ‘சந்திரன் நிலைமாற்றம்’ ஆனது உலகிலுள்ள சதுப்பு நிலங்களில் உள்ள மரங்களின் பரவல் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • சந்திரனின் ஈர்ப்பு விசையானது பெருங்கடல்கள், கடலோரப் பகுதிகள் மற்றும் பல்லுயிர்களின் வளத்தினை மேம்படுத்துகின்ற ஓதங்களை உருவாக்குகிறது.
  • சதுப்புநிலக் காடுகளின் வளர்ச்சி போன்ற அலை சார்ந்த ஈரநில சுற்றுச்சூழல் அமைப்புகளை ஒழுங்குபடுத்துவதில், இந்த நீண்ட காலகட்ட ஓதங்களின் சுழற்சி அமைப்புகள் முக்கியப் பங்கு வகிப்பதாக புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
  • சந்திரனின் நிலைமாற்றம் அதன் குறைந்தபட்ச நிலையில் இருக்கும்போது, ​​சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகள் வறண்டும், சில நாட்களுக்கு அவற்றின் வேர்களில் நீர் உறிஞ்சும் தன்மை நிறைவுற்ற நிலையிலும் மற்றும் அதிக நீர்ப் பற்றாக்குறையுடனும், மரங்களின் மேல் விதானங்களின் பரவல் குறைந்தும் காணப்படுகின்ற நிலைக்கு இது வழி வகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
  • சந்திரனின் நிலைமாற்றம் அதன் அதிகபட்ச நிலையில் இருக்கும் போது, அது கடல் ஓதங்களின் மட்டத்தினை அதிக அளவில் உயரச் செய்து, சதுப்புநிலக் காடுகளின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
  • சதுப்புநிலங்கள் என்பவை மீன்களுக்கு சிறந்த வாழ்விடம் அளிக்கின்ற, கடலோர மண் அரிப்பிலிருந்துப் பாதுகாப்பினை வழங்குகின்ற கடலோரத் தாவரங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்