சதுப்புநிலச் சுற்றுச்சூழல் அமைப்புகளின் வளங்காப்பிற்கான சர்வதேச தினம் - ஜூலை 26
July 29 , 2024 118 days 171 0
இது ஒரு தனித்துவமான, சிறப்பு மற்றும் எளிதில் பாதிக்கப்படக் கூடிய சுற்றுச்சூழல் அமைப்பாக நிலவும் சதுப்புநிலச் சுற்றுச்சூழல் அமைப்புகளின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது சதுப்புநிலத்தின் மீதான நிலையான மேலாண்மை, வளங்காப்பு மற்றும் பல்வேறு பயன்பாடுகளுக்கான தீர்வுகளையும் ஊக்குவிக்கிறது.
இது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (யுனெஸ்கோ) 2015 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் 1987 ஆம் ஆண்டில் 4,046 சதுர கிலோ மீட்டராக இருந்த சதுப்புநிலங்களின் பரவல் ஆனது 2019 ஆம் ஆண்டில் 4,992 சதுர கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது.
2006 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், சுமார் 3.69 மில்லியன் ஹெக்டேராக இருந்த இயற்கையான கடலோர ஈரநிலங்களின் பரவல் ஆனது சுமார் 3.62 மில்லியன் ஹெக்டேராக குறைந்துள்ளது.
ஓதங்களுக்கு இடைப்பட்ட சேற்றுப் பரப்பு ஆனது 116,897 ஹெக்டேர் ஆகவும், உவர்நீர் சதுப்பு நிலங்கள் 5,647 ஹெக்டேர் ஆகவும் குறைந்துள்ளது.