TNPSC Thervupettagam

சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா

August 11 , 2022 711 days 555 0
  • 44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியின் பிரமாண்ட நிறைவு விழாவானது சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
  • சர்வதேச சதுரங்கப் போட்டியானது, சென்னை அருகே உள்ள ஷெரட்டன் மாமல்லபுரம் உல்லாச விடுதி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
  • இந்தப் போட்டியில் உலகெங்கிலும் உள்ள 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் 700 பலகைகளில் போட்டியிட்டனர்.
  • FIDE அமைப்பின் அடுத்த சதுரங்க ஒலிம்பியாட் போட்டியானது 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற உள்ளது.
  • சர்வதேச மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் இந்திய வீரரான சென்னையைச் சேர்ந்த 86 வயதான கிராண்ட் மாஸ்டர் மானுவல் ஆரோன் தமிழக முதல்வரால் கௌரவிக்கப் பட்டார்.
  • 44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் மொத்தம் 17 இந்தியர்கள் பதக்கம் வென்று உள்ளனர்.
  • இதில் தனிநபர்கள் பெற்ற 2 தங்கம், 1 வெள்ளி, தலா 4 வெண்கலம் மற்றும் அணிகள் பெற்ற 10 வெண்கலம் ஆகிய பதக்கங்கள் அடங்கும்.
  • ஓபன் போட்டிப் பிரிவில் உஸ்பெகிஸ்தான், ஆர்மேனியா, இந்தியா பி அணிகள் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றன.
  • இந்திய பி அணியானது பிரக்ஞானந்தா, குகேஷ், நிஹால், ரவுனக் மற்றும் அதிபன் ஆகியோர் அடங்கிய ஒரு அணியாகும்.
  • பெண்கள் பிரிவில் உக்ரைன், ஜார்ஜியா, இந்தியா ஏ ஆகிய அணிகள் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றன.
  • இந்திய மகளிர் ஏ அணியில் ஹரிகா துரோணவல்லி, கோனேரு ஹம்பி, R.வைஷாலி, பக்தி குல்கர்னி, தான்யா சச்தேவ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
  • வீரர்களின் வெற்றி மற்றும் தர மதிப்பீட்டின் அடிப்படையில் தனிநபர்களுக்கு வழங்கப் பட்ட பதக்கங்களில், இந்திய இளம் வீரர்கள் குகேஷ் மற்றும் நிஹால் சரீன் தங்கம் வென்றனர்.
  • ஏ அணி வீரர் அர்ஜுன் எரிகைசி வெள்ளியும், பி அணி வீரர் பிரக்ஞானந்தா வெண்கலமும் வென்றனர்.
  • பெண்கள் பிரிவில் தான்யா சச்தேவ், திவ்யா தேஷ்முக் மற்றும் R.வைஷாலி ஆகியோர் வெண்கலப் பதக்கத்தினை வென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்