சத்தீஸ்கரின் நயா ராய்ப்பூர் பெயர் மாற்றம்
August 24 , 2018
2378 days
699
- முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவாக சத்தீஸ்கர் அரசு நயா ராய்ப்பூரை அடல் நகர் என மறுபெயரிட முடிவு செய்துள்ளது.
- சமுதாயத்திற்கு சிறந்த சேவைகளை வழங்கிய மக்களை கௌரவப்படுத்தும் வகையில் ‘அடல் சுஷாஷன் விருதுகள்’ என்றழைக்கப்படும் விருதுகளை உருவாக்கிட இது எண்ணுகிறது.
- இந்த விருதுகள் சத்தீஸ்கர் மாநிலம் உருவான தினமான நவம்பர் 1ம் தேதி அன்று வழங்கப்படும்.
- இது மாநில காவல் படைப் பிரிவை ‘பொக்ரான் படைப்பிரிவு’ என பெயரிடத் திட்டமிட்டுள்ளது.
- மேலும் இது முதலமைச்சரின் இரண்டாவது கட்ட ‘விகாஸ் யாத்ரா’வை ‘அடல் விகாஸ் யாத்ரா’ எனப் பெயரிட ஒப்புதல் அளித்துள்ளது.
Post Views:
699