இராஜீவ் காந்தி அவர்களின் பெருமையினைப் போற்றும் வகையில் பல்வேறு சமூகத்தினரிடையே தேசிய ஒருமைப்பாடு மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்காக இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
இந்த ஆண்டானது முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி அவர்களின் 79வது பிறந்த நாளினைக் குறிக்கிறது.
இந்தியாவில் உயர்கல்வியை நவீனப்படுத்துவதற்காகவும் விரிவுபடுத்துவதற்காகவும் 1986 ஆம் ஆண்டில் தேசியக் கல்விக் கொள்கையை அவர் முன்மொழிந்தார்.
அவர் இன்று வரையில் இந்தியாவின் இளம் பிரதமர் என்ற பெருமையினைக் கொண்டவராக போற்றப் படுகிறார்.
இராஜீவ் காந்தி தேசிய சத்பவனா விருதானது சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தச் செய்வதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப் படுகிறது.