TNPSC Thervupettagam

சத்யேந்திர நாத் போஸ் – பிறந்த தினம்

January 5 , 2018 2459 days 1207 0
  • பேராசிரியர் சத்யேந்திர நாத் போஸ் அவர்களின் 125-வது பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் கொல்கத்தாவில் அவரது பிறந்தநாள் நிகழ்ச்சியை அரசு ஏற்பாடு செய்துள்ளது.

சத்யேந்திர நாத் போஸ்

  • உலகப் புகழ்பெற்ற இந்திய இயற்பியலாளரான சத்யேந்திரநாத் போஸ் கல்கத்தாவில் 1894-ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று பிறந்தார்.
  • போசான் (Boson) துகள்கள் மீதான அவருடைய அளப்பரிய ஆராய்ச்சி காரணமாக அவர் “கடவுள் துகளின் தந்தை“ (Father of God Particle) என அழைக்கப்படுகின்றார்.
  • சத்யேந்திரநாத் போஸ் – ஐன்ஸ்டின் கோட்பாட்டின் அணுவியல் துகள்கள் பற்றிய ஆய்வின் புள்ளியியல் விவரங்களோடு ஒத்திசைந்து அக்கோட்பாட்டைப் பின்பற்றி செயல்படும் துகள்களின் வகுப்பே, பேராசிரியர் போஸ் அவர்களின் பெயர் கொண்டு ‘‘போஸான்கள்“ (Bosons) என அழைக்கப்படுகின்றன.
  • ஐரோப்பிய எக்ஸ்ரே மற்றும் படிகவியல் ஆய்வகத்தில் பணிபுரியும் போது உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டின், லூயிஸ் டீ பிரேக்ளி மற்றும் மேரி க்யூரி போன்றோருடன் இணைந்து போஸ் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
  • 1954-ஆம் ஆண்டு நாட்டின் இரண்டாவது உயரிய குடிமை விருதான பத்ம விபூஷன் விருதை இவர் பெற்றார்.
  • கல்வியாளர்களுக்கான நாட்டின் மிக உயரிய கவுரவமான தேசிய பேரராசிரியர் பணி இடத்திற்கு 1959-ஆம் ஆண்டு இவர் நியமிக்கப்பட்டார்.

aranthaianifa June 04, 2022

Good

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்