TNPSC Thervupettagam

சத்ரா விஸ்வகர்மா மற்றும் சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா விருதுகள்

January 24 , 2019 2016 days 683 0
  • இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் இரண்டாவது சத்ரா விஸ்வகர்மா விருதினை குழந்தைகள் மற்றும் அவர்களது ஆசான்களுக்கு வழங்கினார். மேலும் இவர் சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா விருதுகளை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கினார்.
  • புதுதில்லியில் அனைத்து இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழுவினால் (All India Council for Technical Education - AICTE) நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் போது இவ்விருதுகள் வழங்கப்பட்டன.
  • 2-வது சத்ரா விஸ்வகர்மா விருதின் கருத்துருவானது, "தொழில்நுட்பத்தின் மூலம் கிராமங்களை வளர்ச்சி பெறச் செய்தல்" என்பதாகும்.
  • சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா விருதின் கருத்துருவானது, "வளர்ச்சியடைந்த கிராமங்கள் - வளர்ச்சியடைந்த தேசம்" என்பதாகும்.
  • கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக புதிய கருத்துகளை வெளியிடும் மற்றும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக சத்ரா விஸ்வகர்மா விருதுகள் வழங்கப்படுகின்றன.
  • சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா விருதின் கீழ் இராஜஸ்தானின் உதய்ப்பூரில் உள்ள தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கல்லூரி முதல் பரிசினைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்