ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திரண்ணா பீமா யோஜனாவின் (Chandranna Bima Yojana) மூன்றாம் ஆண்டு அமல்பாட்டினை துவக்கி வைத்துள்ளார்.
ஆம் ஆத்மி பீமா யோஜனா (Aam Admi Bima Yojana), பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Manthri Jeevana Jyothi Bima Yojana), பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (Pradhana Mantri Suraksha Bima Yojana), மாநில அரசின் தனிநபர் விபத்து மருத்துவக் காப்பீட்டு கொள்கை (Individual Accident Bima Policy) போன்ற திட்டங்களை இந்தக் காப்பீடு உள்ளடக்கியதாகும்.
மொத்த பாலிசி சந்தா கட்டணமும் தொழிலாளர்கள் சார்பாக மாநில அரசினால் கட்டப்படும். பயன்தாரர்கள் ஆண்டிற்கு 15 ரூபாய் மட்டுமே கட்ட வேண்டும்.
மாதம் 15,000 ரூபாய் ஊதியம் பெறும் முறைசாரா துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையவர்கள்.