TNPSC Thervupettagam

சந்திரனுக்கான வர்த்தகரீதியான முதல் தரையிறங்கு வாகனம்

December 28 , 2022 701 days 392 0
  • ஜப்பானின் விண்வெளிசார் புத்தொழில் நிறுவனம் சமீபத்தில் சந்திரனுக்கு ஒரு விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது.
  • இது அந்த நாட்டிற்கும் ஒரு தனியார் நிறுவனத்திற்கும் முதலாவதாக இருக்கும் ஒரு செயல்பாடாகும்.
  • ஜப்பானின் இஸ்பேஸ் நிறுவனத்தின் ஹக்குடோ-R எனும் இந்த விண்வெளிப் பயணம் அமெரிக்காவில் புளோரிடாவின் கேப் கனவெரலில் இருந்து ஏவப்பட்டது.
  • இன்று வரையில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகியவற்றின் அரசு விண்வெளி அமைப்புகள் மட்டுமே நிலவில் மென்மையான தரையிறக்கத்தை நிகழ்த்தியுள்ளன.
  • நிலவில் தரையிறங்கிய M1 வாகனம், ஜப்பானின் JAXA விண்வெளி அமைப்பின் இரு சக்கரம் கொண்ட பேஸ்பால் அளவிலான உலவியையும், ஐக்கிய அரபு அமீரகத்தால் தயாரிக்கப்பட்ட நான்கு சக்கரம் கொண்ட ரஷித் உலவியையும் பயன்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்