சந்திரயான்-3 தரையிறங்கு விண்கலத்துடனான லேசர் தகவல் தொடர்பு
February 3 , 2024 296 days 213 0
நாசாவின் விண்கலம் ஆனது இந்தியாவின் சந்திரயான்-3 தரையிறங்கு கலத்தினுடன் தகவல் தொடர்பை வெற்றிகரமாக மேற்கொண்டது.
நிலவின் மேற்பரப்பில் ஒரு லேசர் (சீரொளி) கற்றையானது அதன் சந்திர ஆய்வு சுற்றுக் கலம் மற்றும் விக்ரம் தரையிறங்கு கலம் ஆகியவற்றுக்கு இடையே முதல் முறையாக அனுப்பப்பட்டு பிரதிபலிக்கப் பட்டது.
இந்த வெற்றிகரமானச் சோதனையானது சந்திரனின் மேற்பரப்பில் இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறியும் புதிய பாணிக்கான வாய்ப்பினை நல்குகிறது.
நாசாவின் LRO கலம், அதன் லேசர் உயரமானிக் கருவியை விக்ரம் தரையிறங்கு கலத்தினை நோக்கி நிலைநிறுத்தியது.
LRO லேசர் துடிப்புகளை அனுப்பிய போது 62 மைல்கள் அல்லது 100 கிலோமீட்டர் தொலைவில், சந்திரனின் தென் துருவப் பகுதியில் உள்ள மான்சினஸ் பள்ளத்திற்கு அருகில் தரையிறங்கு கருவியானது இருந்தது.
விக்ரம் தரையிறங்கு கலம் ஆனது 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று சந்திரனின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கியது.