சந்திரயான்-3 - நிலவின் மேற்பரப்பிற்கு அடியில் பனிக்கட்டி
March 11 , 2025 23 days 85 0
சந்திரயான்-3 தரவுகளின் படி, நிலவின் மேற்பரப்பிற்கு அடியில் காணப்படும் பனிக் கட்டி ஆனது முன்பு நம்பப்பட்டதை விட அதிகமாக இருக்கலாம்.
இஸ்ரோவின் சந்திரயான்-3 கலமானது 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று நிலவின் தென் துருவத்திற்கு அருகில் மிக வெற்றிகரமாக மிதமான வேகத்தில் தரை இறங்கியது.
ChaSTE கருவியானது நிலவின் மேற்பரப்பின் வெப்பக் கடத்துத்திறன் மற்றும் வெப்ப நிலையை அளவிடுவதற்காக வடிவமைக்கப்பட்டது.
இது மேற்பரப்பிலிருந்து 10 செ.மீ ஆழம் வரையில் காணப்படும் ஒரு வெப்பநிலையை அளவிட்டது.
'சிவ சக்தி தளம்/புள்ளி' என்று பெயரிடப்பட்ட கலத்தின் தரையிறக்க தளத்தில், வெப்ப நிலையானது பகலில் 82 டிகிரி செல்சியஸ் முதல் இரவில் சுமார் -170 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருந்தது.