TNPSC Thervupettagam

சந்திரயான்-3 விண்கல சமிக்ஞை நிறுத்தம்

October 2 , 2023 421 days 306 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) சந்திரயான்-3 ஆய்வுக் கலத்தின் விக்ரம் தரையிறங்கு கலம் மற்றும் பிரக்யான் உலாவிக் கலம் ஆகியவற்றில் இருந்து எந்த சமிக்ஞையும் கிடைக்கவில்லை.
  • இந்த ஆய்வுத் திட்டத்தின் அனைத்து சாதனங்களும் சூரிய சக்தியில் இயங்குகின்ற நிலையில் மேலும் ஒரு நிலவு நாள் அல்லது புவி நாளில் சுமார் 14 நாட்களுக்கு நீடிக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • இந்த ஆய்வுத் திட்டத்தின் மின்னணுச் சாதனங்கள் நிலவில் உள்ள கடுமையான இரவு நேர சூழ்நிலைகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப் படவில்லை.
  • தரையிறங்குக் கலம் மற்றும் உலாவிக் கலம் நிலை கொண்டிருக்கும் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் வெப்பநிலை மைனஸ் 200 டிகிரி செல்சியஸுக்கும் கீழே குறைவாக உள்ளது.
  • சமீபத்தில் நிலவில் மோதி இறங்கிய ரஷ்ய லூனா-25 ஆய்வுக் கலத்தில் ஒரு புளூட்டோனியம் ரேடியோ ஐசோடோப்பு கொண்ட சாதனம் இருந்ததோடு, இது ஒரு வகையான அணு சக்தி மின்கலமாக செயல்படக் கூடியது.
  • இதன் செயல்பாடுகள் தொடர்ந்து நிகழும் வகையிலான ஒரு வெப்பநிலையில் அதன் கருவிகளை வைத்திருக்கக் கூடிய வெப்ப நிலையினை உருவாக்க இது உதவும்.
  • விக்ரம் தரையிறங்குக் கலம் மற்றும் பிரக்யான் உலாவிக் கலம் போன்றவற்றில் அத்தகையச் சாதன ஏற்பாடுகள் ஏதும் இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்