TNPSC Thervupettagam

சந்திரயான் 3 – நிலவின் சுற்றுவட்டப் பாதை

August 10 , 2023 474 days 306 0
  • சந்திரயான்-3 விண்கலமானது சுமார் இருபத்தி மூன்று நாட்கள் பயணத்திற்குப் பிறகு நிலவின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக உட்செலுத்தப்பட்டது.
  • நிலவின் மேற்பரப்பில் மிதமான வேகத்தில் விண்கலத்தினைத் தரையிறக்கிய முதல் தேசம் என்ற ஒரு அந்தஸ்தைப் பெறுவதற்கான இந்தியாவின் முயற்சியில் இது ஒரு மிக முக்கியத்துவம் வாய்ந்தப் படிநிலையைக் குறிக்கிறது.
  • இந்த விண்கலமானது நிலவைச் சுற்றி வரத் தொடங்கியதும், அது இஸ்ரோ தொலைவு அளவி, கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு வலையமைப்பில் (ISTRAC) உள்ள விண்கல இயக்க வளாகத்திற்கு (MOX) சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கியது.
  • தற்போதைய நிலவரப்படி, சந்திரயான்-3 விண்கலமானது நிலவினைச் சுற்றி ஒரு நீள் வட்டச் சுற்றுப்பாதையில் உள்ளது.
  • இது சந்திர மேற்பரப்பில் இருந்து அதன் சேய்மைப் புள்ளியில் தோராயமாக 18,074 கி.மீ. தொலைவிலும், அதன் அண்மைப் புள்ளியில் 164 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
  • எனினும், இந்த நீள்வட்டச் சுற்றுப்பாதையானது இந்த விண்கலத்திற்கான ஒரு இறுதிக் கட்டமைப்பு அல்ல.
  • நிலவின் மேற்பரப்பிலிருந்து 100 கி.மீ. x 100 கி.மீ. உயரத்தில் அமைந்த ஒரு வட்ட வடிவச் சுற்றுப்பாதையை அடைவதை இது இலக்காகக் கொண்டுள்ளது.
  • இந்த விண்கலத்தினை அதன் இறுதி கட்டச் சுற்றுப்பாதையில் துல்லியமாக நுழையச் செய்வதற்காக இஸ்ரோ நிறுவனம் நான்கு சுற்றுப்பாதை உந்துதல் முயற்சிகளை மேற் கொள்ளும்.
  • சந்திரயான்-3 விண்கலமானது, ஒரு தரையிறங்குக் கலம் (LM), ஒரு உந்துவிசை விண்கலம் (PM) மற்றும் ஓர் உலாவி விண்கலம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • சந்திரயான்-3 விண்கலத்தின் தரையிறங்குக் கலமானது ஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று நிலவின் மேற்பரப்பை எட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்