TNPSC Thervupettagam

சந்திரயான் 3 – விண்கலம்

July 15 , 2023 501 days 592 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) சந்திரயான் 3 எனப்படும் நிலவு ஆராய்ச்சி விண்கலம் ஆனது, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 2023 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்பட்டது.
  • இந்த விண்கலமானது, மார்க் 3 ஏவூர்தி (LVM 3) மூலமாக விண்ணில் ஏவப்பட்டது.
  • இந்த ஆய்வுத் திட்டமானது 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2 ஆய்வுத் திட்டத்தின் தொடர்ச்சியே ஆகும்.
  • சந்திரயான் 3 ஆய்வுத் திட்டமானது, நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாகத் தரைறங்குதல் மற்றும் உலாவுதல் ஆகியவற்றில் ஆரம்பக் கட்டம் முதல் இறுதிக் கட்டம் வரையிலான செயல்பாட்டு வடிவிலானச் செயல்திறனை வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் நோக்கங்கள் பின்வருமாறு
    • நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பான மற்றும் சேதமற்ற வகையிலான தரைறக்கத்தினைச் செயலாக்குதல்
    • நிலவில் உலாவிக் கலம் சுற்றி வந்து ஆய்வு செய்வதைச் செயலாக்குதல் மற்றும்
    • இடம் சார்ந்த அறிவியல் சோதனைகளை மேற்கொள்தல்.
  • நிலவின் மேற்பரப்பை அடைந்த பிறகு, விக்ரம் எனப்படும் தரையிறங்குக் கலமானது, அது தாங்கி வந்த நான்கு அறிவியல்சார் விண்வெளி கலன்களை நிலை நிறுத்தும்.
  • அவை நிலவின் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் நிலவின் நிலப்பரப்பிற்குக் கீழே காணப் படும் பண்புகள் குறித்து ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • ந்தப் பெட்டகமானது, ‘பூமியினால் வெளியிடப்படும் மற்றும் பிரதிபலிக்கப்படும் ஒளி பற்றியத் தரவுகளைச் சேகரிக்கும் வகையில் வாழத் தகுந்தப் புவிக் கோளின் நிறமாலை - முனைவாக்கமானி’ (SHAPE) எனப்படும் கருவியைக் கொண்டுள்ளது.
  • ‘பிரக்யான்’ எனப்படும் உலாவிக் கலமானது, நிலவின் மேற்பரப்பைச் சுற்றி வரும் சமயத்தில் ரசாயன மற்றும் காட்சிப்படச் சோதனைகளைப் பயன்படுத்தி ஆய்வினை மேற்கொள்ளும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்