மத்திய அரசானது, நிலவினை ஆய்வு செய்வதற்காக வேண்டி சந்திரயான்-5 என்ற ஒரு திட்டத்திற்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
சந்திரயான்-5 திட்டமானது, நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக 250 கிலோ எடையுள்ள உலாவிக் கலத்தினை சுமந்து செல்ல உள்ளது.
2008 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-1 கலமானது, நிலவின் வேதியியல், கனிமவியல் மற்றும் ஒளி சார் ரீதி புவியியல் வரைபடங்களை உருவாக்கியது.
2019 ஆம் ஆண்டில் சந்திரயான்-2 திட்டத்தின் கலமானது நிலவில் தரையிறங்கும் போது நிலவின் மேற்பரப்பில் மோதி இறங்கியதையடுத்து அந்தத் திட்டம் முடிவுக்கு வந்தது.
சந்திரயான்-3 கலமானது, 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று நிலவின் தென் துருவப் பகுதியில் மித வேகத்திலான ஒரு தரையிறக்கத்தை மிக வெற்றிகரமாக மேற் கொண்டது.
சந்திரயான்-4 விண்வெளிக் கலமானது, 2027 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
நிலவில் இருந்து நிலவு மண் மாதிரிகளைச் சேகரித்து மேலும் ஆய்வுக்காகப் பூமிக்குக் கொண்டு வருவதை இது நோக்கமாகக் கொண்டிருக்கும்.