TNPSC Thervupettagam
September 14 , 2021 1077 days 550 0
  • சந்திரயான்  விண்கலமானது நிலவைச் சுற்றி 9000 சுற்றுகளை நிறைவு செய்துள்ளது.
  • இது நிலவின் மேற்பரப்பில் ஒரு தொலைவு உணர்வி மூலம் மாங்கனீசு மற்றும் குரோமியம் ஆகியவற்றின் சிறு கூறுகளை முதன்முறையாகக் கண்டறிந்துள்ளது.
  • நிலவின் மீது இந்த மூலக்கூறுகளின் எடை 1 சதவீதத்திற்கும் குறைவானது என்பதால் இந்தக் கண்டுபிடிப்பானது ஓர் ஆச்சரியமாக உள்ளது.
  • குரோமியம் மற்றும் மாங்கனீசு ஆகிய இரு மூலக்கூறுகளும் தீவிரமான சூரியப் புயல் நிகழ்வின் போது சில இடங்களில் கண்டறியப்பட்டது.
  • இதுவரையில் நிலவின் மேற்பரப்பில் இந்த மூலக்கூறுகள் இருப்பது முந்தைய ஆய்வுகக் கலன்களின் மூலம் புவிக்கு கொண்டு வரப்பட்ட மண் மாதிரிகள் மூலம் மட்டுமே கண்டறியப்பட்டது.
  • விண்வெளித் துறையின் செயலாளரும் இஸ்ரோவின் தலைவருமான K. சிவன் அவர்கள் இத்திட்டத்தின் அறிவியல் மற்றும் தரவுப் பொருள் ஆவணங்களை (data product documents) வெளியிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்