TNPSC Thervupettagam

சந்திரயான் 2 சோதனைக்காக சேலம் மண்

July 14 , 2019 1834 days 632 0
  • பூமியின் மீது சந்திரயான் 2 என்ற விண்கலத்தின் தரையிறங்கும் கலம் மற்றும் நடமாடும் ஆய்வுக் கருவி ஆகியவற்றின் சோதனைக்காக தமிழ்நாட்டின் சேலத்தில் இருந்து மணலை எடுத்து ஒரு ‘உருவகப்படுத்தப்பட்ட மேற்பரப்பை’ V.R. ராவ் செயற்கைக் கோள் மையம் உருவாக்கியுள்ளது.
  • இது செயற்கைக் கோள்களைக் கட்டமைத்தல் மற்றும் செயற்கைக் கோள் தொழில்நுட்பங்கள் சார்ந்தவற்றை மேம்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்கான இஸ்ரோவின் ஒரு முதன்மை மையமாகும்.
  • இது 1972 ஆம் ஆண்டில் பெங்களுருவில் அமைக்கப்பட்டது.
சேலம் மண் எதற்கு?
  • நிலவில் உள்ளதைப் போன்றவாறே இருக்கும் மண் அமைப்பு, வெப்பநிலை, குறைந்த ஈர்ப்புத் தன்மை மற்றும் அதே அளவிலான சூரிய ஒளி கொண்ட மண்ணானது இஸ்ரோவிற்குத் தேவைப்பட்டது.
  • சேலத்தின் சித்தம்பூண்டி மற்றும் குன்னமலை கிராமங்களிலிருந்து “அனார்த்தோசைட் பாறைகள்” நொறுக்கப்பட்டு அவை நிலவின் மண் போன்று உருவகப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டது.
  • நிலவின் நடமாடும் கருவி இந்த மண்ணில் வைத்து சோதனை செய்து பார்க்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்