கொல்கத்தா நகரின் சால்ட் லேக் கால்பந்து விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் கேரள கால்பந்து அணியானது 6-ஆவது முறையாக சந்தோஷ் கால்பந்து டிராபியை வென்றுள்ளது.
கேரளாவிற்கு இது ஆறாவது சந்தோஷ் டிராபி பட்டமாகும். இது 2004-05க்குப் பிறகான கேரளாவின் முதல் பட்டமாகும்.
இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியானது சந்தோஷ் டிராபி போட்டியின் 72-வது பதிப்பாகும்.
இந்தியாவில் முதன்மை கால்பந்து விளையாட்டின் நிர்வாக அமைப்பான அனைத்திந்திய கால்பந்து சம்மேளனத்தின் (All India Football Federation-AIFF) கீழ் அரசு நிறுவனங்களின் கால்பந்து அணிகள் மற்றும் பிராந்திய மாநில கால்பந்து சங்கங்கள் இடையே விளையாடப்படுகின்ற சங்கங்கள் அளவிலான கால்பந்து நாக்-அவுட் போட்டியே (Association football knock-out competition) சந்தோஷ் டிராபியாகும்.