சனியின் துணைக்கோளான டைட்டனின் முதல் உலகளாவிய புவியியல் வரைபடத்தை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். இந்த வரைபடத்தில் பரந்த சமவெளிகள், உறைந்த கரிமப் பொருட்களின் குன்றுகள் மற்றும் திரவ மீத்தேன் ஏரிகள் ஆகியவை அடங்கியுள்ளன.
இந்த வரைபடமானது நாசாவின் ‘காசினி’ விண்கலத்தால் சேகரிக்கப்பட்ட ரேடார், அகச்சிவப்பு மற்றும் பிற தரவுகளை அடிப்படையாகக் கொண்டது.
மேற்பரப்பில் நிலையான திரவங்களைக் கொண்டுள்ள சூரிய மண்டலப் பொருள் (பூமியைத் தவிர) டைட்டன் ஆகும்.
டைட்டன் துணைக்கோளானது (விட்டம் 5,150 கி.மீ), வியாழனின் கேன்மீடிற்கு அடுத்து சூரிய மண்டலத்தின் இரண்டாவது மிகப்பெரிய துணைக்கோளாக உள்ளது.