TNPSC Thervupettagam

சனிக் கோளின் வளையங்கள் மறைவு

December 15 , 2023 218 days 196 0
  • நமது சூரிய மண்டலத்தில், சூரியனில் இருந்து ஆறாவது கோளாக அமைந்த சனி, அதன் கண்கவர் மற்றும் இயல்பு சார் சின்னமாக விளங்கும் அதன் வளையங்களுக்குப் பெயர் பெற்றது.
  • இந்த வளையங்கள், பெரும்பான்மையாக எண்ணற்றப் பனிக்கட்டித் துகள்கள் மற்றும் சிறிய பாறைத் துண்டுகளால் ஆனது.
  • 2025 ஆம் ஆண்டில், ஒளியியல் மாயை காரணமாக இந்த வளையங்கள் பார்க்க முடியாதவாறு மறைந்து விடும் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
  • சனிக் கோளானது பூமியுடன் சரியான சீரமைப்பில் இல்லை, அது 9 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் இந்தக் கோணம் சுமார் 3.7 டிகிரியாகக் குறைந்திருக்கும்.
  • ஒரு வருடம் கழித்து, பூமியிலிருந்து அது விலகிச் செல்வதால், சனிக் கோளின் அச்சு அதன் தற்போதைய சாய்ந்த நிலையில் இருந்து செங்குத்து நிலைக்கு மாறும்.
  • இது அதன் வளையங்களை பூமிக்கு இணையான மெல்லிய கிடைமட்டப் பட்டை போல தோற்றமளிக்கும்.
  • இது இந்தக் கட்டமைப்பினைப் பார்ப்பதற்கு மிகவும் மெல்லியதாக உள்ளது போல் தோன்றச் செய்யும்.
  • இந்த நிகழ்வு, வளையங்களின் அடிப்பகுதி வெளிப்படும் காலமான 2032 ஆம் ஆண்டு வரை நீடிக்கும்.
  • சனிக் கோளின் வளைய அமைப்பு ஆனது அக்கோளில் இருந்து 282,000 கிலோ மீட்டர்கள் வரை நீண்டுள்ளது.
  • ஆனால் செங்குத்து உயரம் ஆனது பொதுவாக ஏழு பிரதான வளையங்களில் சுமார் 30 அடி இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்