TNPSC Thervupettagam

சனிக்கோளின் வளையங்கள்

September 11 , 2024 22 days 88 0
  • 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், புவியின் அச்சினுடைய சாய்வின் காரணமாக சனிக் கோளின் வளையங்களைப் பூமியிலிருந்து பார்க்க முடியாது என்ற நிலையில்  இது பூமியிலிருந்து சனிக் கோளின் வளையங்களின் புலனாகும் தன்மையினை நன்கு சீரமைக்கும்.
  • இந்த அரிய நிகழ்வு ஆனது நமது புவியில் இருந்து சனிக்கோள் எவ்வாறு புலனாகிறது என்பதைக் கணிசமாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • சனிக் கோளானது பூமியைப் போலவே சாய்ந்த அச்சைக் கொண்டுள்ளது என்பதோடு  அதன் ஆண்டின் ஒரு பாதியில் (1 சனி ஆண்டு என்பது 29.4 பூமி ஆண்டுகளுக்குச் சமம்) அக்கோள் சூரியனின் திசையில் சாய்கிறது.
  • அதனால்தான் அதன் வளையத்தின் மேல் பகுதி பளபளப்பாக காட்சியளிக்கிறது.
  • இந்தக் கிரகம் ஆனது சூரியனைச் சுற்றி வரும் போது ஒவ்வொரு 29.5 ஆண்டுகளுக்கும் அவை தற்காலிகமாக மறைந்துவிடும்.
  • 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு, சனிக் கோளின் அச்சுச் சாய்வின் காரணமாக அவை மீண்டும் புலப்படும்.
  • ஆனால் அதே ஆண்டு நவம்பரில் மீண்டும் அவை மறைந்துவிடும்.
  • அதன் வளையங்கள் 2032 ஆம் ஆண்டில் மீண்டும் பார்வைக்கு முழுமையாகப் புலப் படும்.
  • சனிக் கோளின் வளைய அமைப்பு ஆனது ஒரு ஒற்றைத் திடமான கட்டமைப்பு அல்ல, மாறாக அது பல்வேறு பிரிவுகளின் தொகுப்பாகும்.
  • இது மங்கலான D, E, F மற்றும் G வளையங்களுடன் கூடிய பிரதான A, B மற்றும் C வளையங்களை உள்ளடக்கியது.
  • இந்த பிரிவுகள் ஆனது குறிப்பிடத்தக்க காசினிப் பிரிவு போன்ற இடைவெளிகளால் பிரிக்கப் படுகின்றன என்பதோடு இது தோராயமாக 4,800 கிமீ அகலம் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்