குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் சன்டோக்பா மனிதாபிமான விருதினை ('Santokbaa Humanitarian Award') குழந்தை உரிமைகள் ஆர்வலர் மற்றும் நோபல் விருதினை வென்றவருமான கைலாஷ் சத்யாத்ரி அவர்களுக்கும், விண்வெளி ஆராய்ச்சியாளரான இஸ்ரோவின் முன்னாள் தலைவர்S கிரண் குமார் அவர்களுக்கும் வழங்கியுள்ளார்.
சண்டோக்பா மனிதாபிமான விருதானது ஸ்ரீ ராம்கிருஷ்ணா அறிவு அறக்கட்டளையால் (Shree Ramkrishna Knowledge Foundaton -SRKKF) நிறுவப்பட்டது.
தன்னலமற்ற மற்றும் உத்வேகமளிக்கின்ற சேவையினை வழங்குவதைப் பணியாகவும் வாழ்க்கையாகவும் கொண்ட தனிநபர்களின் மனிதாபிமான பங்களிப்பினை அங்கீகரிப்பதற்காக ஸ்ரீ ராம் கிருஷ்ணா அறிவு அறக்கட்டளையால் ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகின்றது.
இந்த விருதானது முதன் முதலில் 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதுவரை இவ்விருதானது ரத்தன் டாட்டா, தலாய்லாமா, பிக்ஹீ பரேக், டாக்டர் வர்கீஸ் குரியன், காந்தியவாதி நாராயண் தேசாய், ஷாம் பிட்ரோடா போன்றோருக்கு வழங்கப்பட்டுள்ளது.