பல்சர் ஃபியூஷன் என்ற பிரிட்டன் நாட்டு புத்தொழில் நிறுவனமானது, சன்பேர்ட் எனப் படும் அணுக்கரு இணைவு மூலம் இயங்கும் ஏவுகலத்தினை உருவாக்கி வருகிறது.
அணுக்கரு இணைவு மூலம் இயங்கும் இந்த ஏவுகலம் ஆனது, விண்கலங்கள் மணிக்கு சுமார் 805,000 கிலோ மீட்டர் வேகத்தை அடைய உதவும் என்பதோடு இது பார்க்கர் சூரிய ஆய்வுக் கலத்தினை விட மிக வேகமானதாகும்.
மணிக்கு 692,000 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் பார்க்கர் கலமானது, இதுவரை கட்டமைக்கப்பட்ட வேகமான விண்கலமாகும்.
அணுக்கரு இணைவு மூலம் இயங்கும் இந்த ஏவுகலமானது செயல்பாட்டுக்கு வந்தால், செவ்வாய்க் கிரகத்தை அடைய ஆகும் காலத்தினைப் பாதியாகவும், புளூட்டோவை அடையத் தேவையான நேரத்தை நான்கு ஆண்டுகளாகவும் குறைக்கும்.