TNPSC Thervupettagam

சன்ரைஸ் திட்டம் - மிக நீண்ட பயணத் தொலைவு கொண்ட இடை நில்லா விமானம்

October 22 , 2019 1768 days 655 0
  • ஆஸ்திரேலியாவின் கொடியைத் தாங்கிப் பறந்த விமானமான குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானமானது நியூயார்க்கில் இருந்து சிட்னிக்கு உலகின் மிக நீண்ட பயணத் தொலைவு கொண்ட வணிக விமானப் பயணத்தை நிறைவு செய்தது.
  • ஏறக்குறைய 20 மணி நேரம் பயணித்த இந்த உலகின் மிக நீண்ட வணிக விமானப் பயணமானது விமானிகள், பணியாளர்கள் மற்றும் பயணிகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை குவாண்டாஸ் ஆய்வு செய்தது.
  • குவாண்டாஸ், தனது சன்ரைஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக மூன்று நீண்ட பயணத் தொலைவு விமானங்களை அறிவித்துள்ளது.
  • ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து லண்டன் மற்றும் நியூயார்க்கிற்கு இடைநில்லாமல் செல்லும் வர்த்தக விமானங்களைத்  தொடர்ந்து இயக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்