விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டிக்கு அருகில் உள்ள புல்லூர் என்ற இடத்தில், கி.பி. 8 ஆம் நூற்றாண்டு முதல் 10 ஆம் நூற்றாண்டு வரை சமணர் பள்ளி இருந்ததாக நம்பப் படுகிறது.
இத்தளத்தில் குறைந்தது நான்கு கல்வெட்டுகள் கண்டுபிடிக்க ப்பட்டுள்ளன.
மாறன் சடையன் என்ற பாண்டிய மன்னனால் நான்காம் ஆட்சியாண்டில் 50 ஆடுகள் தானமாக வழங்கப்பட்டதாக கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது.
வட்டெழுத்து எழுத்து வடிவில் உள்ள மற்றொரு கல்வெட்டு, கி.பி. 997 ஆம் ஆண்டு இராஜ இராஜ சோழனின் 12வது ஆட்சியாண்டில் பாலத்துறைக்குடி கோபாலன் என்பவரால் 25 ஆடுகள் தானம் வழங்கப் பட்டதாக குறிப்பு உள்ளது.