சமத்துவமின்மையினைக் குறைப்பதற்கான உறுதிப்பாட்டுக் குறியீடு – 2022
October 23 , 2022 765 days 431 0
இது 161 நாடுகள் தனது மக்கள் மத்தியில் சமத்துவமின்மையைக் குறைப்பதில் மேற் கொள்ளும் செயல்திறனை மதிப்பிடுகிறது.
இந்தக் குறியீடானது பொதுச் சேவைகள் (சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு), வரிவிதிப்பு மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் ஆகிய துறைகளில் நாடுகளின் கொள்கைகள் மற்றும் செயல்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்துகிறது.
இது ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் மற்றும் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் இன்டர் நேஷனல் ஆகியவற்றின் ஒரு கூட்டுத் திட்டமாகும்.
2022 ஆம் ஆண்டிற்கான இந்தக் குறியீடு, பெருந்தொற்றுக் காலத்தின் போது சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடும் நாடுகளின் கொள்கைகள் மற்றும் செயல்களின் முதலாவது விரிவான மதிப்பீடாகும்.
குறைந்த வருமானம் மற்றும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் தனது வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரச் செலவினங்களில் 50% வரை தனது பங்கைக் குறைத்துள்ளன.
50% நாடுகள் சமூகப் பாதுகாப்புச் செலவினங்களின் பங்கைக் குறைத்துள்ளன என்பதோடு மேலும் 70% நாடுகள் கல்விச் செலவினத்தின் பங்கைக் குறைத்துள்ளன.
143 நாடுகள் பணக்காரக் குடிமக்கள் மீதான வரி விகிதத்தை அதிகரிப்பதைத் தவிர்த்து விட்டன.
11 நாடுகளின் அரசாங்கங்கள் உண்மையில் பணக்காரர்களுக்கான வரி விகிதங்களைக் குறைத்துள்ளன.
2022 ஆம் ஆண்டின் குறியீட்டில் நார்வே முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, ஜப்பான், டென்மார்க், நியூசிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
இந்தியா 123வது இடத்தில் உள்ளது என்றாலும் இது 2020 ஆம் ஆண்டு முதல் 6 இடங்கள் முன்னேறியுள்ளது (129 வது இடத்தில் இருந்தது).
இருப்பினும், சுகாதாரச் செலவினங்களைப் பொறுத்தவரை இந்தியா 2 இடங்கள் சரிந்து உள்ளது.