தோட்டக்கலைத்துறைக்கு செயல்தந்திர மேம்பாட்டை (Strategic development) அளித்து அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்காக கொண்டுவரப்பட்ட முன்னோடித் திட்டமாகும்.
தொலை உணர்வுத் தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம் மகாலநோபிஸ் தேசிய பயிர் முன்கணிப்பு மையத்தால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட உள்ளது. மார்ச் 2018 இல் திட்டம் முழுவதும் நிறைவு செய்யப்பட உள்ளது.
பூகோள இடஞ்சார்ந்த ஆய்வுகளான பழத்தோட்ட புத்துயிராக்கம், பயிர் உற்பத்தியை தீவிரப்படுத்துதல், நீர்வளர்ப்பு முறையிலான தோட்டக்கலை போன்றவற்றினுடைய பயன்பாட்டின் மூலம் பயிர் உற்பத்திக்கான நம்பகமான மதிப்பீடுகள் உருவாக்கப்படும்.
ஏழு முக்கிய தோட்டக்கலைப் பயிர்களுக்காக மேம்படுத்தப்பட்டுள்ள இந்த முறையானது அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்படும்.
இவை விவசாயிகள் இலாபகரமான முறையில் தோட்டக்கலைப் பயிர்களை வளர்த்து அதன் மூலம் இரட்டிப்பு வருமானத்தை பெற உதவும்.