உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத் தொகையை வழங்க உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இது அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் மகளிர் T20 போட்டியிலிருந்து தொடங்க உள்ளது.
மகளிர் T20 உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 2.34 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும்.
2023 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் கோப்பை வென்ற போது ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு வழங்கப்பட்ட 1 மில்லியன் டாலரை விட இது 134% அதிகமாகும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆடவர் T20 உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2.45 மில்லியன் டாலர் ரொக்கப் பரிசைப் பெற்றது.
ICC 2024 ஆம் ஆண்டு மகளிர் T20 உலகக் கோப்பை ஆனது, மகளிர் அணியினர் ஆடவர் அணிக்கு இணையான பரிசுத் தொகையைப் பெற உள்ள முதல் போட்டியாகும்.