TNPSC Thervupettagam

சமயச் சிறுபான்மையினரின் பங்கு (1950-2015)

May 13 , 2024 67 days 123 0
  • பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) ஆனது, இந்தியா உட்பட 167 நாடுகளில் உள்ள மதச் சிறுபான்மையினரின் பங்கு குறித்த ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவைப் பொறுத்தவரையில், இந்தக் காலக்கட்டத்தில் முஸ்லிம்களின் மக்கள் தொகையில் 43.15% அதிகரித்துள்ள நிலையில், இந்துக்களின் மக்கள்தொகையில் 7.82% குறைந்துள்ளது என்று இந்த ஆய்வறிக்கை வியத்தகு தகவலை முன் வைக்கிறது.
  • 1950 ஆம் ஆண்டில், மக்கள்தொகையில் 84.68% ஆக இருந்த இந்துக்களின் பங்கு ஆனது, 2015 ஆம் ஆண்டில் 78.06% ஆகக் குறைந்தது.
  • இதேபோல், மக்கள்தொகையில் 9.84% ஆக இருந்த முஸ்லிம்களின் பங்கு ஆனது 14.09% ஆக உயர்ந்துள்ளது.
  • இந்துக்களின் பங்கு ஆனது 7.82% குறைந்துள்ளதாகவும், கிறிஸ்தவர்களின் பங்கு 5.38% அதிகரித்துள்ளதாகவும், சீக்கியர்களின் பங்கு 6.58% ஆக அதிகரித்துள்ளதாகவும், பாரசீகர்களின் பங்கு 85% அளவில் குறைந்துள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை முடிவு செய்துள்ளது.
  • 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நாட்டில் 96.63 கோடி இந்துக்கள் (மக்கள்தொகையில் 79.8%) மற்றும் 17.22 கோடி முஸ்லிம்கள் மக்கள் தொகையில் 14.2%) இருந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்