அமெரிக்காவின் சர்வதேசச் சமய சுதந்திரத்திற்கான ஆணையமானது (USCIRF) இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
ஈரான் மற்றும் பாகிஸ்தான் உட்பட 12 நாடுகளை, குறிப்பிட்ட அளவில் கவலை கொள்ள வைக்கும் நாடுகள் (CPCs) பட்டியலில் மீண்டும் வைக்கப்பட வேண்டி பரிந்துரைக்கப் பட்டு உள்ளதாக USCIRF தெரிவித்துள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சிரியா, வியட்நாம் மற்றும் இந்தியா ஆகிய ஐந்து நாடுகளுக்குக் குறிப்பிட்ட அளவில் கவலை கொள்ள வைக்கும் நாடுகள் அந்தஸ்தினை வழங்க பரிந்துரைத்துள்ளது.
முதன்முறையாக, இலங்கையினை இந்த "சிறப்புக் கண்காணிப்புப் பட்டியலில்" சேர்க்க வேண்டி USCIRF முன்மொழிந்துள்ளது.
இந்தியாவில் சமயச் சுதந்திரத்திற்கான நிலைமைகள் 2022 ஆம் ஆண்டில் "தொடர்ந்து மோசமடைந்து வருகின்றன" என்று இந்த அறிக்கை கூறுகிறது.