சமர்த் திட்டத்தினைப் (Samarth scheme) பற்றியும், அதனுடைய வழிகாட்டுதல்களைப் பற்றியும் சமர்த் திட்டத்தின் பங்குதாரர்கள் அறிந்து கொள்வதற்காக புதுதில்லியில் திறன் இந்தியா திட்டத்தின் (Skill India Mission) கீழ், சமர்த் திட்டத்தினுடைய பங்குதாரர்கள் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
சமர்த் திட்டமானது ஜவுளித் துறையில் உள்ள பங்குதாரர்களின் திறன்களை கட்டமைப்பதற்கான (Capacity Building Scheme) திட்டமாகும்.
இந்த சந்திப்பிற்கு மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி தலைமை தாங்கினார்.
மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தினுடைய (Ministry of Textiles) இந்த சமர்த் திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புதலினை வழங்கியது.
நூற்பு மற்றும் நெசவு ஆகியவற்றைத் தவிர்த்து (spinning and weaving), ஜவுளித் துறையினுடைய முழு மதிப்புச் சங்கிலியையும் (entire value chain of textiles) உள்ளடக்கி, ஜவுளித் துறையில் இலாபகரமான மற்றும் நீடித்த வேலைவாய்ப்பிற்காக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியினை வழங்குவதே இத்திட்டத்தின் பரந்த நோக்கமாகும்.