பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது விமான என்ஜின்களுக்கான முக்கியத்துவம் வாய்ந்த சம வெப்பநிலைக்கு அண்மையிலான ஒரு அச்சு வடிப்புத் தொழில்நுட்பத்தினை உருவாக்கியுள்ளது.
சமவெப்பநிலை அச்சு வடிப்பு முறையானது ஒரு மூடப்பட்ட முறையிலான வார்ப்பு செயல்முறை ஆகும்.
இங்கு வார்ப்புகளும் வேலைப்பாடு செய்யப்பட வேண்டிய பொருள்களும் ஒரே வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தப்படும்.
இந்தத் தொழில்நுட்ப உருவாக்கத்தின் மூலம் இது போன்ற முக்கிய விமான எஞ்ஜின் கூறுகளை உருவாக்கும் திறனுடைய உலகளாவிய எஞ்சின் உற்பத்தி நிறுவனம் கூட்டமைப்பில் இந்தியா இணைந்துள்ளது.